Sunday 21 July 2013

HacerNetO: TNPSC/TET/TRB STUDY MATERIAL FOR TAMIL (தமிழ் இலக்கணம் | வினா விடைகள்.2)

HacerNetO
Way to Global Tricks 
TNPSC/TET/TRB STUDY MATERIAL FOR TAMIL (தமிழ் இலக்கணம் | வினா விடைகள்.2)
Jul 22nd 2013, 02:02, by Hacer Neto


ஒலி மரபுச் சொற்கள்:
•  குயில் கூவும், மயில் அகவும், சேவல் கூவும், காகம் கரையும், கிளி கொஞ்சும், கூகை குழறும், வானம்பாடி பாடும், கோழி கொக்கரிக்கும், நாய் குரைக்கும், பன்றி உறுமும், யானை பிளிறும்.

வினை மரபுச் சொற்கள்:
•   அப்பம் தின், காய்கறி அரி, இலை பறி,  நெல் தூற்று, களை பறி, பழம் தின், நீர் பாய்ச்சு, பாட்டுப்பாடு, மலர் கொய், கிளையை ஒடி, மரம் வெட்டு, விதையை விதை, நாற்று நடு, படம் வரை, கட்டுரை எழுது, தீ மூட்டு, விளக்கேற்று, உணவு உண்.
பஞ்சகவ்யம் என்பது - கோமியம், சாணம், பால், தயிர், நெய் ஆகிய ஐந்து பொருள்கள் சேர்ந்த கலவை. இதனை பயிரில் தெளித்தால் புழு, பூச்சிகள் பயிரை நெருங்காது.
• முதல் வேற்றுமை உருபு என்பது - இயல்பான பெயர், பயனிலையைக் கொண்டு முடிவது முதல் வேற்றுமை எனவும், எழுவாய் வேற்றுமை எனவும் வழங்கப்படும்.
•  இரண்டாம் வேற்றுமை உருபு என்பது - 'ஐ' என்பது இரண்டாம் வேற்றுமை உருபு ஆகும். வளவன் செய்யுளைப் படித்தான். இத்தொடரில் உள்ள செய்யுள் என்னும் பெயர்ச்சொல் 'ஐ' என்னும் உருபையேற்றுச் செய்யப்படுபொருளாக வேறுபடுத்திக் காட்டுகிறது.
•    மூன்றாம் வேற்றுமை உருபு - ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்.
•    நான்காம் வேற்றுமை உருபு - கு.
•    ஐந்தாம் வேற்றுமை உருபு - இல், இன்.
•    ஆறாம் வேற்றுமை உருபு - அது
•    ஏழாம் வேற்றுமை உருபு - கண், உள், மேல், கீழ்
•    எட்டாம் வேற்றுமை உருபு - இதற்கு உருபு இல்லை. இதனை விளி வேற்றுமை என்பர். எடுத்துக்காட்டு: கந்தா வா!
•    போலி:
•    மூன்று வகைப்படும். 1.முதற்போலி, 2. இடைப்போலி, 3.இறுதிப்போலி.
•    முதற்போலி:  ஒரு சொல்லின் முதலெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாது வருவது முதற்போலி - எ.டு. மஞ்சு - மைஞ்சு; மயல் - மையல்.
•    இடைப்போலி : ஒரு சொல்லின் இடையெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாது இருப்பது இடைப்போலி. எ.டு. முரசு - முரைசு, அரசியல் - அரைசியல்.
•   இறுதிப்போலி: ஒரு சொல்லின் ஈற்றெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாது இருப்பது இறுதிப்போலி (கடைப்போலி என்பர்) - எ.டு. - அறம் - அறன், பந்தல் - பந்தர்.

காலங்கள் மூன்று வகைப்படும்
•    இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்

தாவர உறுப்புப் பெயர்கள்:
•  ஈச்ச ஓலை, தாழை மடல், பனையோலை, சோளத்தட்டை, தென்னையோலை, பலா இலை, மாவிலை, மூங்கில் இலை, வாழை இலை, வேப்பந்தழை, கமுகங்கூந்தல், நெற்றாள்.
•    செடி, கொடி மரங்களின் தொகுப்பிடம்:
•    ஆலங்காடு, சவுக்குத்தோப்பு, தென்னந்தோப்பு, கம்பங்கொல்லை, சோளக்கொல்லை, தேயிலைத்தோட்டம், பனந்தோப்பு, பலாத் தோப்பு, பூஞ்சோலை.

பொருள்களின் தொகுப்பு:
•    ஆட்டு மந்தை, கற்குவியல், சாவிக்கொத்து, திராட்சைக்குலை, வேலங்காடு, பசு நிரை, மாட்டு மந்தை, யானைக் கூட்டம், வைக்கோற்போர்.

பொருளுக்கேற்ற வினைமரபு:
•    சோறு உண், நீர்குடி, பால் பருகு, பழம் தின், பாட்டுப்பாடு, கவிதை இயற்று, கோலம் இடு, தயிர் கடை, விளக்கை ஏற்று, தீ மூட்டு, படம் வரை, கூரை வேய்.

குற்றியலுகரம்
•    குறுகிய ஓசையுடைய உகரம் குற்றியலுகரம்.
•    கு,சு,டு,து,பு,று என்னும் ஆறு வல்லின எழுத்துகள் தனிநெடிலைச் சார்ந்து வரும்போதும், பல எழுத்துகளைச் சார்ந்து சொல்லின் இறுதியில் வரும்போதும் ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். அவ்வாறு குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம்.
• நெடில் தொடர்க் குற்றியலுகரம், ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம், உயிர்த்தொடர்க் குற்றியலுகரம், வன்றொடர்க் குற்றியலுகரம், மென்றொடர்க் குற்றியலுகரம், இடைத்தொடர்க் குற்றியலுகரம் என ஆறுவகைப்படும்.
•    குற்றியலுகரத்திற்கு அரை மாத்திரை
•    ஈற்று அயலெழுத்தாகத் தனிநெடில், ஆய்தம், உயிர்மெய், வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைப் பெற்று வரும்.
•    நெடில் தொடர்க் குற்றியலுகரம் மட்டுமே இரண்டு எழுத்துக்களைப் பெற்று வரும். எடுத்துக்காட்டு ஆடு, மாடு, காது.

குற்றியலிகரம்:
•    குறுகிய ஓசையுடைய இகரம் குற்றியலிகரம்
•  நாகு+யாது = நாகியாது, வீடு+ யாது = வீடியாது, வீடு என்பன நெடில்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள். இவை நிலைமொழியாய் நிற்க, வருமொழியின் முதல் எழுத்து ய கரமாக இருப்பின், உகரம் இகரமாகும். இந்த இகரம்தான் குற்றியலிகரம் எனப்படும்.

முற்றியலுகரம்:
•    தன்மாத்திரை அளவில் குறையாமல் இருந்தால் அது முற்றியலுகரம் எனப்படும்.
•    பகு, பசு, படு, அது, தபு, பெறு இவை தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரம் (கு,சு,டு,து,பு,று) பெற்ற முற்றியலுகரங்கள்.
•    காணு, உண்ணு, உருமு இவற்றின் ஈற்றிலுள்ள மெல்லின (ணு, மு) உகரங்கள் முற்றியலுகரங்கள்.
•   தனிக்குறிலை அடுத்துச் சொல்லின் இறுதியில் வரும் வல்லின மெய்யின் மேல் ஊர்ந்து வரும் உகரமும், பொதுவாகச் சொற்களின் இறுதியில் மெல்லின மெய்யின்மேல் ஊர்ந்து வரும் உகரமும், இடையின மெய்யின்மேல் ஊர்ந்துவரும் உகரமும் ஆகிய மூன்றும் முற்றியலுகரம் எனப்படும்.
செய்தி வெளிப்படும் திறன்:
• தொடர்களில் செய்தி வெளிப்படும் தன்மையினைப் பொருத்துச் செய்தித் தொடர், வினாத் தொடர், விழைவுத் தொடர், உணர்ச்சித் தொடர் என பலவகைப்படுத்தலாம். விழைவுத் தொடர் வாழ்த்துதல், வேண்டுதல், கட்டளையிடுதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும்.
எடுத்துக்காட்டுகள்:
•    முயற்சி திருவினையாக்கும் என்பது ஆன்றோர் மொழி - செய்தித்தொடர்
•    பாடம் படித்தாயா? - விழைவுத் தொடர்
•    என்னே, அருவியின் அழகு! - உணர்ச்சித் தொடர்
•    கண்ணன் பாடம் படித்தான் - உடன்பாட்டுத் தொடர் (செய்தி)
•    கண்ணன் பாடம் படித்திலன் - எதிர்மறைத் தொடர் (செய்தி)

You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.

If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment

THANK YOU FOR COMMENT ON HTTP://TWEEKNTRICK.blogspot.com