Sunday 21 July 2013

HacerNetO: TNPSC/TET/TRB STUDY MATERIAL FOR TAMIL (தமிழ் இலக்கியம் | தமிழறிஞர்கள், புலவர்கள்)

HacerNetO
Way to Global Tricks 
TNPSC/TET/TRB STUDY MATERIAL FOR TAMIL (தமிழ் இலக்கியம் | தமிழறிஞர்கள், புலவர்கள்)
Jul 22nd 2013, 02:01, by Hacer Neto


தமிழ்தாத்தா உ.வே.சா.
•    இயற்பெயர் - வேங்கடரத்தினம்
•    பிறந்த ஊர் - உத்தமதானபுரம் (திருவாரூர் மாவட்டம்)
•    சாமிநாதன் என்ற பெயரை வைத்தவர் உ.வே.சா.வின் ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை.
•    காலம் - 19.02.1855 - 28.04.1942
•    தமிழ்தாத்தாவின் வாழ்க்கை வரலாற்றின் பெயர் - என் சரிதம்
•    உ.வே.சா. பதிப்பித்த நூல்கள் - எட்டுத்தொகை 8, பத்துப்பாட்டு 10, சீவகசிந்தாமணி 1, சிலப்பதிகாரம் 1, மணிமேகலை 1, புராணங்கள் 12, உலா 9, கோவை 6, தூது 6, வெண்பா நூல்கள் 13, அந்தாதி 3, பரணி 2, மும்மணிக்கோவை 2, இரட்டை மணிமாலை 2, இதர பிரபந்தங்கள் 4.

திரு.வி.கலியாணசுந்தரனார்
•    இயற்பெயர்: திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார் என்பதன் சுருக்கமே திரு.வி.க.
•    பெற்றோர் : விருத்தாசலனார் - சின்னம்மையார்.
•    ஊர் - துள்ளம் (காஞ்சிபுரம் மாவட்டம்)
•    சிறப்புப் பெயர் - தமிழ்த்தென்றல்
•    படைப்புகள் : மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்த்தென்றல், உரிமை வேட்கை, முருகன் அல்லது அழகு.
•    காலம் : 26.08.1883 - 17.09.1953

ஜி.யு.போப்
•    முழு பெயர் - ஜியார்ஜ் யுக்ளோ போப்
•    பெற்றோர் பெயர் - ஜான் போப், கெதரின் யளாபக்
•    தமிழ் மொழியைப் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதிய ஏடுகள் - இந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு.
•    திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு - 1886
•    திருவாசகத்தின் பெருமையை ஆங்கிலத்தில் வெளியிட்ட ஆண்டு - 1900

தணிகை உலகநாதன்
•    பெயர்  - தணிகை உலகநாதன்
•    ஊர் - திருவத்திபுரம், வேலூர் மாவட்டம்
•    பெற்றோர் - தா.தணிகாசலம் - சுந்தரம் அம்மையார்
•    காலம் - 01.10.1921 - 19.11.1993
•    இயற்றிய நூல்கள் - பூஞ்சோலை, தேன்சுவைக் கதைகள், பாடும் பாப்பா, மாணவர் தமிழ் விருந்து, சிறுவர் நாடக விருந்து.

ராமலிங்க அடிகளார்
•    சிறப்புப் பெயர் - திருவருட்பிரகாச வள்ளலார்
•    பிறந்த ஊர் - மருதூர் (கடலூர் மாவட்டம்)
•    பெற்றோர் - ராமையா - சின்னம்மையார்
•   இவர் எழுதிய நூல்கள் - ஜீவகாருண்யஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம். இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் திருவருட்பா எனத் தொகுக்கப்பட்டுள்ளன.
•    வாழ்ந்த காலம் - 5.10.1823 - 30.01.1874
பாவேந்தர் பாரதிதாசன்
•    இயற்பெயர் - கனக சுப்புரத்தினம். ஊர்: புதுச்சேரி
•    பெற்றோர் - கனகசபை - லட்சுமி
•    காலம் - 29 - 04 - 1891      -     21-04-1964.
•    இயற்றிய நூல்கள் - சஞ்சீவி பர்வதத்தின் சாரல், இசையமுது, அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு.
•    சிறப்புப் பெயர்கள் - புரட்சிக் கவிஞர், பாவேந்தர்

நாமக்கல் கவிஞர்.வெ.இராமலிங்கம்:
•    பெயர் - இராமலிங்கம்
•    பெற்றோர் - வெங்கடராமன் - அம்மணி அம்மாள்
•    பிறப்பிடம் - மோகனூர் (நாமக்கல் மாவட்டம்)
•    காலம் - 19.10.1888 - 24.08.1972
•    சிறப்பு: விடுதலைப் போராட்ட வீரர், தமிழ்நாடு அரசவைக் கவிஞர். கதை, கவிதைகளை எழுதித் தமிழ் வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றியவர்.

கவிமணி சி. தேசிக விநாயகம் பிள்ளை:
•    இயற்பெயர் - தேசிக விநாயகம் பிள்ளை
•    சிறப்புப் பெயர் - கவிமணி
•    பெற்றோர் - சிவதாணுப்பிள்ளை - ஆதிலட்சுமி
•    பிறந்த ஊர் - தேரூர் (கன்னியாகுமரி மாவட்டம்)
•    காலம் - 27.08.1876 - 26.09.1954
•    இயற்றிய நூல்கள் - மருமக்கள் வழி மான்மியம், ஆசிய ஜோதி, உரைமணிகள், மலரும் மாலையும், உமர்கய்யாம் பாடல்கள்.

திருவள்ளுவர்:
•    காலம் - கி.மு. 31
•    வேறு பெயர்கள் - தெய்வப் புலவர், செந்நாப் போதார், பொய்யில் புலவர், நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபங்கி, பெருநாவலர்.
•    இவர் எழுதியது - திருக்குறள் (மொத்தம் 133 அதிகாரங்கள். அதிகாரத்திற்கு 10 குறள்கள் என மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
•    திருக்குறளுக்கு வேறு பெயர் - முப்பால், பொதுமறை, தமிழ்மறை, உலகப் பொதுமறை.
•    திருக்குறளுக்கு வேறு பெயர்கள் - வாயுறை வாழ்த்து, பொதுமறை, பொய்யாமொழி, தெய்வ நூல்.
•    திருக்குறளை லத்தீனில் எழுதியவர் - வீரமா முனிவர்.
•    திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - ஜி.யு.போப்
•    திருக்குறளின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் நூல் - திருவள்ளுவமாலை.

கம்பர்:
•    இயற்பெயர் - கம்பர்
•    பிறந்த ஊர் - தேரழுந்தூர், மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது
•    தந்தை பெயர் - ஆதித்தன்
•    போற்றியவர் - சடையப்ப வள்ளல்.
•    இயற்றிய நூல்கள் - கம்பஇராமாயணம், சடகோபரந்தாதி, ஏரெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம்.
•    காலம் - பன்னிரெண்டாம் நூற்றாண்டு

தாயுமானவர்:
•    பெயர் - தாயுமானவர்
•    பெற்றோர் - கேடிலியப்பர் - கேசவல்லி அம்மையார்
•    மனைவி - மட்டுவார்குழலி
•    ஊர் - நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு (வேதாரண்யம்)
•    பணி- திருச்சியை ஆண்ட விசய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலர்.
•    காலம் - கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு
•    நூல் - தாயுமானவர் திருப்பாடல் திரட்டு

குமரகுருபரர்:
•    இயற்பெயர் - குமரகுருபரர்
•    ஊர் - திருவைகுண்டம் (தூத்துக்குடி மாவட்டம்)
•    பெற்றோர் - சண்முக சிகாமணிக் கவிராயர், - சிவகாம சுந்தரி.
•    சிறப்பு - இளமையில் கவிபாடும் ஆற்றல் பெற்றவர்
•  இவர் எழுதிய நூல்களின் பெயர் - நீதிநெறி விளக்கம், முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ், கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம்.

பரிதிமாற் கலைஞர்
•    இயற்பெயர் - சூரிய நாராயண சாஸ்திரி.
•    இவரது காலம் - 1870  - 1903.
•    ரூபாவதி, கலாவதி, மானவிஜயம் ஆகியவை இவர் இயற்றிய நாடகங்கள்.
•    நாடக இலக்கணங்களைத் தொகுத்து, நாடகவியல் எனும் நூலை எழுதினார்.
•    மானவிஜயம் நாடகம் களவழி நாற்பது எனும் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது.

சங்கரதாசு சுவாமிகள்
•    இவரது காலம் 1867 - 1920
•    வள்ளி திருமணம், கோவலன் சரித்திரம், சதி சுலோசனா, இலவகுசா, பக்தப் பிரகலாதா, நல்லதங்காள், சதி அனுசுயா, வீர அபிமன்யு, பவளக்கொடி உள்ளிட்ட நாற்பது நாடகங்களை இயற்றியுள்ளார்.

பம்மல் சம்பந்தனார்
•    இவரது காலம் - 1875 - 1964.
•    மனோகரா, யயாதி, சிறுத்தொண்டன், கர்ணன், சபாபதி, பொன்விலங்கு உள்ளிட்ட 94 நாடகங்களை இயற்றியுள்ளார்.
•    சேக்ஸ்பியரின் நாடகங்களைத் தழுவி வாணிபுரத்து வணிகன், விரும்பிய விதமே, அமலாதித்தியன் முதலிய நாடகங்களைப் படைத்தார்.

You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.

If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment

THANK YOU FOR COMMENT ON HTTP://TWEEKNTRICK.blogspot.com