பதினெண்கீழ்க்கணக்கு: • நாலடியார் நூல்களுள் ஒன்று • மொத்தம் 400 பாடல்களைக் கொண்டது. • நாலடி நானூறு என்பது இதன் சிறப்புப் பெயர்.
முதுமொழிக்காஞ்சி • ஆசிரியர் - மதுரைக் கூடலூர்கிழார் • பிறந்த ஊர் - கூடலூர் • நூல் குறிப்பு - காஞ்சித் திணையின் துறைகளுள் ஒன்று • இந்நூலின் வேறொரு பெயர் - அறவுரைக்கோவை • மொத்தம் பத்து அதிகாரங்கள் உண்டு. நூறு பாடல்களால் ஆனது. • திரிகடுகம் - நல்லாதனார் (ஆசிரியர்), திருநெல்வேலி மாவட்டம் திருத்து என்னும் ஊரில் பிறந்தவர்.
இரட்டுற மொழிதல் • ஆசிரியர்: காளமேகப் புலவர். • பிறந்த ஊர் - கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நந்திக் கிராமம் எனவும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எண்ணாயிரம் எனவும் கூறுவர். • இயற்பெயர் - வரதன்
நான்மணிக்கடிகை • இது பதினென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று • கடிகை என்றால் அணிகலன் • நூலாசிரியர் பெயர் - விளம்பிநாகனார் • விளம்பி என்பது ஊர்ப்பெயர் ; நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.
பழமொழி நானூறு • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று • நானூறு பாடல்களைக் கொண்ட நூல் இது • ஆசிரியர் பெயர் - முன்றுறை அரையனார். முன்றுறை என்பது ஊர்ப்பெயர், அரையன் என்ற சொல் அரசனைக் குறிக்கும்.
காவடிச்சிந்து • ஆசிரியர் - அண்ணாமலையார் • ஊர் - திருநெல்வேலி மாவட்டத்துச் சென்னிகுளம் • பெற்றோர் - சென்னவர், ஓவு அம்மாள். • நூல்கள் - காவடிச்சிந்து, வீரை அந்தாதி, கோமதி அந்தாதி, வீரைப்பிள்ளைத் தமிழ். • காலம் - 1861 - 1890
இனியவை நாற்பது • ஆசிரியர் பெயர் - பூதஞ்சேந்தனார் • ஊர் - மதுரை • காலம் - கி.பி. இரண்டாம் நூற்றாண்டு • இவர் எழுதிய நூல் - இனியவை நாற்பது - இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. நன்மைதரும் இனிய கருத்துகளை நாற்பது பாடல்களில் தொகுத்துரைப்பதால் இனியவை நாற்பது எனப் பெயர்பெற்றது. இந்நூலின் ஒவ்வொரு பாடலும் மூன்று அல்லது நான்கு நற்கருத்துகளை இனிமையாகக் கூறும்.
தேம்பாவனி • ஆசிரியர் பெயர் - வீரமாமுனிவர் • இயற்பெயர் - கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி • பெற்றோர் - கொண்டல் போபெஸ்கி - எலிசபெத் • பிறந்த ஊர் - இத்தாலி நாட்டில் காஸ்திக்கிளியோன் • அறிந்த மொழிகள் - இத்தாலியம், இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம். • தமிழ்க் கற்பித்தவர் - மதுரைச் சுப்பிரதீபக் கவிராயர். • இயற்றிய நூல்கள் - ஞானோபதேசம், பரமார்த்த குரு கதை சதுரகராதி, திருக்காவலூர்க்க கலம்பகம், தொன்னூல் விளக்கம். • காலம் - 1680 - 1747
நளவெண்பா • பெயர் - புகழேந்திப் புலவர் • ஊர் - தொண்டை நாட்டின் பொன் விளைந்த களத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருங்களத்தூர்) • சிறப்பு - வரகுணப் பாண்டியனின் அவைப் புலவர் • ஆதரித்த வள்ளல் - சந்திரன் சுவர்க்கி • காலம் - கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு. கம்பரும், ஒட்டக்கூத்தரும் இவர் காலத்தில் வாழ்ந்தவர்கள் • இவர் எழுதிய நூல் - நளவெண்பா. நளனது வரலாற்றை வெண்பாக்களால் கூறும் நூல். சுயம்வர காண்டம், கலித்தொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என மூன்று காண்டங்களைக் கொண்டது. இதில் நானூற்று முப்பத்தொரு வெண்பாக்கள் உள்ளன.
You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
No comments:
Post a Comment
THANK YOU FOR COMMENT ON HTTP://TWEEKNTRICK.blogspot.com