Sunday, 21 July 2013

HacerNetO: TNPSC/TET/TRB STUDY MATERIAL FOR TAMIL ( தமிழ் | அறிய தகவல்கள்)

HacerNetO
Way to Global Tricks 
TNPSC/TET/TRB STUDY MATERIAL FOR TAMIL ( தமிழ் | அறிய தகவல்கள்)
Jul 22nd 2013, 02:08, by Hacer Neto

விலங்குகளின் இளமைப் பெயர்கள்:

விலங்குகளின் இளமைப் பெயர்கள்:
-  அணிற்பிள்ளை, ஆட்டுக்குட்டி, கழுதைக் குட்டி, குதிரைக்குட்டி, நாய்க்குட்டி, பன்றிக்குட்டி, எருமைக்கன்று, பசுங்கன்று, கீரிப்பிள்ளை, சிங்கக் குருளை, எலிக்குஞ்சு. புலிப் போத்து.

விலங்குகள், பறவைகள் தங்குமிடம்:
-  குதிரைக்கொட்டில், மாட்டுத்தொழுவம், வாத்துப்பண்ணை, கோழிப்பண்ணை, யானைக்கூடம்.

விலங்குகள், பறவைகள் ஒலி:
அணில் கீச்சிடும், ஆந்தை அலறும், கழுதை கத்தும், குதிரை கனைக்கும், சிங்கம் முழங்கும், புலி உறுமும், நரி ஊளையிடும், யானை பிளிறும், குயில் கூவும், காகம் கரையும்.

காய்களின் இளமைப் பெயர்கள்:
•    அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு.
•    சொல் பொருள் : களஞ்சியம் - தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி - கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி - உலகம்.
•    சதாவதானி - ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர்.
•    இறைவை - நீர் இறைக்கும் கருவி
•    பசுந்தாள் - பசுமையான இலை தழைகள்
•    மானாவாரி - மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம்.
•    தமிழக அடையாளங்கள்  - மரம் :  பனை மரம், மலர் - செங்காந்தள் மலர், விலங்கு - வரையாடு, பறவை - மணிப்புறா.
•   ஒன்பது மணிகள் - முத்து, பவளம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், ரத்தினம், வைரம், வைடூரியம், கோமேதகம்.
•   மூவேந்தர் - சேரர், சோழர், பாண்டியர்; சேரர்களின் மாலை - பனம்பூ மாலை, சோழர்களின் மாலை - அத்திப்பூ மாலை, பாண்டியர்களின் மாலை - வேப்பம்பூ மாலை.
•    நால்வகைப்படைகள் - காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை.

மதுரையில் வாழ்ந்த சங்கப்புலவர்கள்
நக்கீரனார், குமரனார், நல்லந்துவனார், மருதனிளநாகனார், இளந்திருமாறன், சீத்தலைச் சாத்தனார், பெருங்கொல்லனார், கண்ணகனார், கதங்கண்ணாகனார், சேந்தம்பூதனார்.இருபதாம் நூற்றாண்டில் நாடகக் கலைக்கு புத்துயிர் ஊட்டியவர்கள் - பரிதிமாற்கலைஞர், சங்கரதாசு சுவாமிகள், பம்மல் சம்பந்தனார்.

தாவரங்கள் : காய்களின் இளமை மரபு
•    அவரைப்பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வாழைக்கச்சல், வெள்ளரிப்பிஞ்சு, கொய்யாப்பிஞ்சு, பலாமூசு, தென்னங்குரும்பை.

விலங்குகள் : இளமை மரபு
• குருவிக்குஞ்சு, கோழிக்குஞ்சு, ஆட்டுக்குட்டி, கழுதைக்குட்டி, எருமைக்கன்று, குதிரைக்குட்டி, பன்றிக்குட்டி, குரங்குக்குட்டி, மான்கன்று, நாய்க்குட்டி, பூனைக்குட்டி, யானைக்கன்று, புலிப்பறழ், கீரிப்பிள்ளை.

சிந்தனையாளர்கள்; கவிஞர்கள்
•    ஷேக்ஸ்பியர் - ஆங்கில நாடக ஆசிரியர்
•    மில்டன் - ஆங்கிலக் கவிஞர்
•    பிளேட்டோ - கிரேக்கச் சிந்தனையாளர்
•    காளிதாசர் - வடமொழி நாடக ஆசிரியர்
•    டால்ஸ்டாய் - ரஷ்யநாட்டு எழுத்தாளர்
•    பெர்னார்ட்ஷா - ஆங்கில நாடக ஆசிரியர்

தமிழ் எழுத்துக்களின் மாத்திரை அளவு:
•    மெய்யெழுத்து - அரை மாத்திரை
•    உயிரெழுத்து (குறில்) - ஒரு மாத்திரை
•    உயிரெழுத்து (நெடில்) - இரு மாத்திரை
•    உயிர்மெய் (குறில்) - ஒரு மாத்திரை
•    உயிர்மெய் (நெடில்) - இரு மாத்திரை

You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.

If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment

THANK YOU FOR COMMENT ON HTTP://TWEEKNTRICK.blogspot.com