Thursday, 11 July 2013

HacerNetO: TNPSC பொதுத் தமிழுக்கு தயாராவது எப்படி?

HacerNetO
Way to Global Tricks
TNPSC பொதுத் தமிழுக்கு தயாராவது எப்படி?
Jun 25th 2013, 16:05, by Hacer Neto

பகுதி அ .
1. பொருத்துதல் பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் நூல் ஆசிரியர் நூல் தேர்வு
  
இந்தப் பகுதியில் மிகவும் எளிதாக மதிப்பெண் பெறலாம்பொதுவாக ஒரு வார்த்தைக் குறிப்பிடப்பட்டு அதற்கான நான்கு அர்த்தங்களில் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உதாரணம் -1
      பொருத்துக:
      1.நாவாய்     அ.உலகு 
      2.வையகம்    ஆ.படகு 
      3.விண்மீன்    இ.மேகம் 
      4.எழிலி           ஈ.நட்சத்திரம்
விடை 

உதாரணம் -2
மணநூல் என்ற அடைமொழியால் குறிப்பிடப்படும் நூல எது ? 
  1. திருக்குறள்
  2. கம்ப ராமாயணம்
  3. சீவக சிந்தாமண 
  4. பழமொழி நானூறு
விடை சீவக சிந்தாமணி
எப்படித் தயாராவது ?
சில வார்த்தைகள் உங்களுக்கு புதிதாக கூட இருக்கலாம்ஆனால் பொதுத்தமிழ் பகுதியைப் பொறுத்த வரையில் 10 ஆம் வகுப்பு தரத்தில் கேள்விகள் கேட்கப்படுவதால். தமிழ் வார்த்தைகள் மற்றும் நூல்கள் தொடர்பான கேள்விகள் முதல் 10 வரையிலான தமிழ் பாடப் புத்தகத்திலிருந்தே கேட்கப்படுகின்றன

பகுதி அ. 2.தொடரும் தொடர்பும் அறிதல்-இத்தொடராக் குறிப்பிடப்படும் சான்றோர்/ அடைமொழி -நூல்

"அடைமொழி வச்சவன் யாரும் அழிஞ்சது இல்லடா" 
இந்த வரிகளை தமிழ் திரைப்படட்தில் கேள்விப்பட்டிருப்பீர்கள். தமிழ் மொழியிலும் புலவர்களுக்கும், அவர்கள் எழுதிய நூலகளுக்கும் அடைமொழிகள் இருக்கின்றன. இந்த அடைமொழிகளையும் அது தொடர்புடைய நூல்கள் அல்லது நூலாசிரியரை சரியாக தேர்ந்தெடுப்பதே இந்த பகுதியின் உள்ளடக்கம்.

உதாரணமாக, சுரதாவை 'உவமைக்கவிஞர்' எனவும் திரு,வி.க வை ''தமிழ்தென்றல்' எனவும் குறிப்பிடுவதை கூறலாம்.

அதுபோல் , திருக்குறளை ' உலகப்பொது மறை' என்றும் திருகயிலாய ஞான உலா என்ற  நூலை 'குட்டி திருவாசகம்' எனவும் அடைமொழியால் குறிப்பிடுவதைக் கூறலாம்.

உதாரணம் 1.  
பின்வருவனவற்றில் 'குட்டி திருக்குறள்' என அடைமொழியால் குறிப்பிடப்படும் நூல் எது ?

1.பழமொழி
2.ஏலாதி
3.நாலடியார்
4.புறநானூறு

விடை : ஏலாதி

உதாரணம் 2.

'பன்மொழிப்புலவர்' என்ற அடைமொழியால் கூறப்படுபவர் ?

1. இராஜாஜி
2.அறிஞர். அண்ணா
3.அழ.வள்ளியப்பா
4.கா.அப்பாத்துரை

விடை : கா.அப்பாத்துரை 

எப்படித் தயாராவது ?

இந்தப் பகுதியில் கேட்கப்படும் கேள்விகள் தமிழ்நாடு அரசு 6 முதல் 10 வகுப்பு வரையிலான தமிழ் மொழி பாடப் புத்தகத்தின் பகுதிகளிலிருந்து மட்டுமே கேட்கப்படுகின்றன. எனவே, தமிழ் பாடத்தில் ஏதாவது புதிய வார்த்தைகளைக் கண்டால் விட்டு விடாதீர்கள், இப்பகுதியில் அவை வினாவாக இருக்கலாம்.

கவலைப்படாதீர்கள்  பொதுத்தமிழ் பாடதிட்டத்தில் காணப்படும் பகுதி ஆ மற்றும் பகுதி இ ஆகிவற்றைப் படிக்கும் போது, இந்த பகுதியையும் சேர்த்து படித்து விடலாம்.

பகுதி அ. 3.பிரித்தெழுதுக

பொதுத்தமிழ் பகுதியில் மிகவும் எளிதான பகுதி என்று குறிப்பிட வேண்டுமானால் நான் இதையே குறிப்பிடுவேன்.  ஒரு வார்த்தையைக் குறிப்பிட்டு அதற்கான 4 பதில்கள் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் சரியான பதிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


உதாரணம் 1. செங்கோல் - பிரித்து எழுதுக 

அ. செம் + கோல்
ஆ.செம்மை + கோல்
இ.செங் + கோல்
ஈ. செ + கோல்

விடை : ஆ.செம்மை + கோல்


உதாரணம் 2. வேலேறு  - பிரித்து எழுதுக 

அ.வேல்+ஏறு
ஆ.வே+ஏறு
இ.வேமை+ஏறு
ஈ.வேலேற் + உ

விடை : அ.வேல்+ஏறு

எப்படித் தயாராவது ?


6 வது முதல் 10 வது வரையிலான பாடப் புத்தகங்களின் தமிழ் பகுதியை நன்றாக படித்தால் மட்டுமே போதுமானது.

பகுதி அ : 4.எதிர்ச்சொல்


பிரித்தெழுதுக பகுதியைப் போலவே எதிர்ச்சொல் பகுதியும் ஒரு எளிய பகுதி. இந்த வகையான கேள்விகளில் ஏதேனும் ஒரு வார்த்தையைக் குறிப்பிட்டு அதற்கான எதிர்ச்சொல்லை கொடுக்கப்பட்டுள்ள நான்கு வார்த்தைகளிலிருந்து தெரிவு செய்ய வேண்டும்.

பொதுவாக இப்பகுதியில் கேட்கப்படும் கேள்விகள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளாகவே இருக்கும்.

உதாரணம் :

1. இனிய - என்ற வார்த்தைக்கு எதிர்சொல் எது ?

அ.சுவையான
ஆஇன்பமான
இ.இன்னாத
ஈ.நல்ல

விடை : இ.இன்னாத ( இன்னாத என்ற வார்த்தை திருக்குறளில் பொதுவாக பயன்படுத்தப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே)

2.இயற்கை - எதிர்ச்சொல் தருக ?

அ.உண்டாக்குதல்
ஆ.அழித்தல்
இ.இருக்கை
ஈ.செயற்கை

விடை : ஈ.செயற்கை

எப்படித் தயாராவது ?

இதற்காக தனியாக படிக்கத் தேவையில்லையென்றாலும் , 6-10 தமிழ் பாட புத்தகத்தில் வரும் இதுமாதிரியான எதிர்ச்சொல்களைக் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

பகுதி அ  : 5.பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுத்தல் 

இவ்வகை வினாக்கள் தேர்வரின் ஆழ்ந்த தமிழறிவை சோதிக்கும் வண்ணம் இருக்கும், ஆனால் எளிதான வினாக்களே பொதுவாகக் கேட்கப்படுகின்ற்றன.  நான்கு வார்த்தைகள் கொடுக்கப்பட்டிருக்கும், அவை நான்குமே ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே இருக்கும், ஆனால் ஒன்று மட்டும் வேறுபட்டிருக்கும். உதாரணமாக ராமன், ராவணன், லட்சுமணன், சீதை  - இவற்றில்  பொருந்தாச் சொல்லைக் கண்டறியச்சொல்வார்கள்.  நான்கு பெயர்களுமே ராமாயணத்தில் வரும்  பெயர்கள், ஆனால் சீதை மட்டும் பெண்பால். இதைப்போல் எளிய வகை வினாக்களே கேட்கப்படலாம்.


உதாரணம் :  பொருந்தாச் சொல்லை தேர்ந்தெடுக்கவும் ?

அ.குறிஞ்சி
ஆ.முல்லை
இ.மருதம்
ஈ.மதுரை

விடை : மதுரை 

எப்படித் தயாராவது ?

இதற்காகத் தனியே சிறப்பு பயிற்சி ஒன்றும் தேவையில்லை. தமிழ் பள்ளிப் பாட புத்தகத்தைப் படிக்கும் போது, வித்தியாசமான, உங்களுக்குத் தெரியாத ஆண்பால், பெண்பால், புனைப்பெயர்களை குறிப்பெடுங்கள். 

பகுதி அ - 6.பிழை திருத்தம் - சந்திப்பிழை/ஒருமை பன்மை/மரபு பிழை/ வழுவுச்சொல்/பிற மொழிச் சொல்

இந்த வகை வினாக்களில் ஐந்து வகையிலான கேள்விகள் கேட்கப்படலாம்.

அ.சந்திப்பிழை நீக்குதல்
இரண்டு சொற்கள் சேரும் பொது ஏற்படும் மாற்றத்தில் பிழைகளே சந்திப் பிழைகளாகும்.

அதாவது ஏற்கனவே இருக்கின்ற விகுதியோடு இன்னொரு சொல் இணையும் போது ஏற்படும் மாற்றங்கள்.

உதாரணமாக , போர் + செயல்   = போர்ச்செயல் என மாறுவதைக் கூறலாம்.


இவ்வகையான வினாக்களுக்கு நீங்கள் தயாராக வேண்டுமென்றால், வல்லினம் மிகும் இடங்கள் மற்றும் வல்லினம் மிகா இடங்கள் எவை என்பவற்றை அறிந்திருக்க வேண்டும். சந்தையில் கிடைக்கும் எந்த ஒரு பொதுத் தமிழ் வழிகாட்டியிலும் இந்த விசயங்கள் உள்ளடக்கியிருக்கும். சமயம் வாய்த்தால் இதைப்ப்பற்றி பின்னர் காணலாம்.


ஆ.ஒருமை பன்மை கண்டறிதல்


இது ஒரு எளிய வகை வினா, தேர்வரின் தமிழறிவை சோதிக்கும் வண்ணம் , வாக்கியங்களில் வரும் ஒருமை/பன்மை (singular/flural) வேறுபாடுகளை கண்டறியும் திறனை சோதிக்கும் வண்ணம் இருக்கும்.

உதாரணம் : ஒருமை/பன்மை பிழைகளைக் கண்டறிக ?

அ.தமிழ்நாடு அணி போட்டியில் வென்றனர்
ஆ.தமிழ்நாடு அணி போட்டியில் வென்றார்கள்
இ.தமிழ்நாடு அணி போட்டியில் வென்றது
ஈ.தமிழ்நாடு அணி போட்டியில் வென்றன.

விடை : இ.தமிழ்நாடு அணி போட்டியில் வென்றது( தமிழ்நாடு என்ற பெயர் ஒருமையில் வந்ததால் வென்றது என்பது ருமையிலேயே வர வேண்டும்.)

இ.மரபு பிழை கண்டறிதல்


நம் அன்றாட வாழ்க்கையில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பல சொற்களைப் பயன்படுத்தி வ்வருகிறோம், அவை தூய தமிழ் வார்த்தைகளாக இல்லாமல் கூட இருக்கலாம். இவ்வகை வினாக்கள் அப்படிப் பட்ட மரபுப் பிழைகளை பிரித்தறியும் உங்கள் திறமையை சோதிக்கும் வண்ணம் இருக்கும்.


உதாரணம் : மரபுப் பிழையை நீக்குக?

அ. தென்னங்குட்டி
ஆ.தென்னங்கன்று
இ.தென்னங்கண்ணு
ஈ.தென்னம்பிள்ளை

விடை: ஆ.தென்னங்கன்று

ஈ.வழுவுச்சொல் கண்டறிதல்

சில தமிழ் சொற்களை நாம் பெரும்பாலான சமயங்களில் வழுவுச் சொற்களாகவே பயன்படுத்தி வருகிறோம். 'தலையணை' என்ற சொல்லை 'தலகாணி' என்றும் 'மனம்' என்ற சொல்லை 'மனசு', 'மனது' என்றும் மாறிப் பயன்படுத்துவதைக் கூறலாம். இவ்வகை வினாக்களில் அப்படிப்பட்ட வழுவு சொற்களற்ற தூய்மையான தமிழ் வார்த்தையைக் கண்டறிய வேண்டும்.

உதாரணம் : வழுவு அற்ற சொல்லைக் கண்டறிக 

அ.அறுவா மனை
ஆ.அரிவாள் மனை
இ.அறுவாள் மனை
ஈ.அரிவாய் மனை

விடை:ஆ.அரிவாள் மனை

உ.பிறமொழிச் சொல் நீக்குதல் 


நாம் பேசும் வழக்கில் அனேக தமிழல்லாத மொழிகளையும் சேர்த்து பேசுகிறோம். இதில் ஆங்கில மொழியின் ஆதிக்கமே அதிகம். இவ்வகை வினாக்களில் அப்படிப்பட்ட பிற மொழி கலப்பினைக் கண்டறிந்து நீக்க வேண்டும்.

உதாரணம் : பிற மொழி சொற்களை நீக்குக ?

அ.வருசக் கடைசி
ஆ.வருடக் கடைசி
இ.வருடக் கடசி
ஈ.ஆண்டுக் கடைசி

விடை : ஈ.ஆண்டுக் கடைசி

எப்படித் தயாராவது ?


இப்பகுதி வினாக்களையும் நீங்கள் சிறப்பாக எதிர்கொள்வதற்கு , 6 முதல் 10 வது வகுப்பு தமிழ் பாட பகுதிகள், குறிப்பாக 9, 10 வது தமிழ் புத்தகங்களை படிக்கவும்.

You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.

If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment

THANK YOU FOR COMMENT ON HTTP://TWEEKNTRICK.blogspot.com