Thursday, 11 July 2013

HacerNetO: 2013 Current Affairs MAY TO JULY

HacerNetO
Way to Global Tricks
2013 Current Affairs MAY TO JULY
Jul 11th 2013, 08:13, by Hajira Barvin

2013 Current Affairs &  GK
Month & Date
Place
News
July 8
World
ஐரோப்பிய யுனியனில் அண்மையில் இணைந்த நாடு--குரோஷியா
july 8
India
உச்ச நீதிமன்றத்தின் 40 வது (தற்போதைய ) தலைமை நீதிபதி- தமிழகத்தைச் சார்ந்த சதாசிவம்.
June 25
India
சுவிஸ் வங்கிகளில், கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் எண்ணிக்கை, கணிசமாக குறைந்துள்ளது. கறுப்பு பண பதுக்கல் பட்டியலில், இந்தியா, 55வது இடத்திலிருந்து, 70வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.
June 24
Sports
கிரிக்கெட்  2013 சாம்பியன் டிராபி (மினி உலகக்கோப்பை) போட்டியில் கோல்டன் பேட்டை இந்திய வீரர் தவான் பரிசாகப் பெற்றார். அதிக ரன் எடுத்ததற்காக அவருக்கு இந்த பரிசு வழங்கப்பட்டது.
கோல்டன் பந்தை இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா பெற்றார். அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியதற்காக அவருக்கு இந்த பரிசு வழங்கப்பட்டது.
June 24
Sports
கிரிக்கெட்  2013 சாம்பியன் டிராபியை(மினி உலகக்கோப்பை)  இந்தியா கைப்பற்றியது.
June 18
Sports
விம்பிள்டன் டென்னிஸ் பைனலில் "காயின்' சுண்டிவிடும் அரிய கவுரவம் இந்தியாவின் பிங்கி சோன்கருக்கு வழங்கப்பட்டுள்ளது.உ.பி.,யில் உள்ள மிர்சாபூரை சேர்ந்த இளம் சிறுமி பிங்கி சோன்கர், 11. இவருக்கு பிறவியிலேயே உதடு பிளவுபட்டு இருந்தது. இவரை சமூகம் ஒதுக்கி வைத்தது. பள்ளிக்கு கூட செல்ல முடியவில்லை. வறுமை காரணமாக இவரது குறைபாட்டை சரி செய்ய முடியாமல் பெற்றோர் தவித்தனர்.இந்த நேரத்தில் அமெரிக்காவை சேர்ந்த "ஸ்மைல் டிரெய்ன்' என்ற தொண்டு நிறுவனம் கைகொடுத்தது. இந்நிறுவனம் உதடு பிளவுபட்டு வறுமையில் வாடுபவர்களுக்கு இலவச சிகிச்சை அளித்து வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்த டாக்டர் சுபோத் குமார் சிங், 2007ல் பிங்கிக்கு அறுவை சிகிச்சை செய்து உதட்டை சரி செய்தார். இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு அமெரிக்காவை சேர்ந்த இயக்குனர் மேகன் மைலன் "ஸ்மைல்' பிங்கி என்ற பெயரில் "டாக்குமென்ட்டரி' படம் எடுத்தார். இதற்கு 2008ல் ஆஸ்கர் விருது கிடைத்தது.தற்போது பிங்கியை கவுரவப்படுத்த விம்பிள்டன் டென்னிஸ் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். வரும் ஜூலை 7ல் நடக்க உள்ள ஆண்கள் ஒற்றையர் பைனலில் "டாஸ்' சுண்டிவிடும் பெருமையை அளிக்க உள்ளனர்
June 16
celebration Day
இன்று உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
June 10
India
அமெரிக்காவில் உயர்கல்விக்காக தேர்வாகியுள்ள மும்பை சிவப்பு விளக்கு பகுதி பெண் ஸ்வேதா
June 10
World
உலகிலேயே அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளில், அரபு நாடான கத்தார் முதலிடத்தில் உள்ளதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு தெரிவித்துள்ளது. இது குறித்து, துபாயை சேர்ந்த, பாஸ்டன் ஆலோசனைக் குழுமம், சமீபத்தில் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:கத்தாரில், 1,000 பேரில், 143 பேர், தனிப்பட்ட முறையில், 4 கோடி ரூபாய்க்கு அதிபதிகளாக உள்ளனர். கத்தாருக்கு அடுத்தபடியாக, அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளில், குவைத், பக்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
June 7
Sports
 உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி 16வது இடத்தில் உள்ளார். ஒப்பந்தங்கள் அடிப்படையிலான பரிசுத் தொகையாக 2012- 13ம் ஆண்டில் இவர் ரூ.180 கோடி வருமானம் ஈட்டி உள்ளார்.
June 5
India

 தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதுவரை 6 சதவீதமாக இருந்த இறக்குமதி வரி, தற்போது 2 சதவீதம் உயர்ந்து 8 சதவீதமாக உள்ளது. இதனால் தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

June 5
World

அமெரிக்கா அதிபர் ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து டாம் டோனிலன் ராஜினாமா செய்துள்ளார். அந்த பதவிக்கு, ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதர் சூசன் ரைஸ் நியமிக்கப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினர்.

June 4
India

 ரயில்வேயில் நடந்த ஊழல் குறித்து, முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலிடம், சி.பி.ஐ., இந்த வாரம் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளது.

June 4
India

ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழலில்தொடர்புடைய, இத்தாலியைச் சேர்ந்த,"அகஸ்டா வெஸ்ட்லாண்ட்' நிறுவனம்,மத்திய அரசு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.அதில், தங்களுக்கு சேர வேண்டியநிலுவை தொகையை, உடனே செலுத்தவேண்டும் என, தெரிவித்துள்ளது.

June 1
World

மெக்சிகோவின் கிறிஸ்தவ மலை மீது அமைந்த மாருதி திருக்கோயில்

June 1
Tamil Nadu
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை செயல்பட, தேசிய ப"மைத் தீர்ப்பாயம் நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நான்கு உறுப்பினர் குழு மேற்பார்வையில், தொழிற்சாலையை இயக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
June 1
Tamil Nadu
தமிழகத்தின் மக்கள் தொகை, 7.21 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த, 10 ஆண்டுகளில், தமிழக மக்கள் தொகை, 97 லட்சம் அதிகரித்துள்ளது. ஆண்களுக்கு நிகரான பெண்கள் விகிதம், 9 புள்ளிகள் அதிகரித்துள்ளது. 16 மாவட்டங்களில், ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர்.
May 30
World
காத்மாண்டு: எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து குதித்து ரஷ்ய வீரர் சாதனை படைத்தார். உலகி்ன் மிகவம் உயரமாக சிகரம் எவரெஸ்ட். இந்த சிகரத்தினை அடைந்த எட்மாண்ட் ஹிலாரி, டென்சிங் நார்கே ஆகியோர் முதன்முறையாக கடந்த 1953-ம் ஆண்டு மே 29-ம் தேதி சாத‌ை படைத்தனர். இதன் 60-வது தினத்தை கொண்டாடும் வகையில் ரஷ்யாவச் சேர்ந்த வெலேரி ரூசோ (48) என்ற சாகச வீரர், எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து கீழே குதித்து சாதனை படைத்தார். இதற்காக கடந்த 5-ம் தேதி தனது குழுவினருடன் சென்றார். 7 ஆயிரத்து 222 மீட்டர் உயரத்தில் (23 ஆயிரம்அடி ) நின்று சக வீரர்கள் வாழ்த்த , கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே குதித்தார். இதற்கென பிரத்யோக இறக்கை போன்ற உபகரணங்கள் மூலம் நடுவானில் பறவை போல் பறந்து இறதியில் தகுந்த பாதுகாப்புடன் தரையிறங்கி சாதனை படைத்தார். ரூசோ கூறுகையில், இந்த சாதனைக்காக நான்கு வாரங்கள் தீவிர பயி்ற்சி மேற்கொண்டேன் என்றார்.
May 29
World
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மதிய உணவுத் திட்டத்துக்கு ஐ.நா. பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உலக உணவுத் திட்ட செயல் இயக்குநர் எர்தாரின் கசின் கூறியதாவது:
பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு உணவு வழங்குவது முக்கியமானதாகும். பல்வேறு வளரும் நாடுகளில் இதில் கவனம் செலுத்தப்படவில்லை.பள்ளியில் உணவு அளிப்பது என்பது, தரமான கல்வியை அளிப்பதை உறுதி செய்யும். இது குழந்தைகளுக்காக செய்யும் சிறந்த முதலீடாகும். இதனால் குழந்தைகள், சுகாதாரத்துடன், வலு மிக்கவர்களாக விளங்குவர். இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் குழந்தைகளுக்கு பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் திட்டம் கடந்த 1960-ல் அப்போதைய முதல்வர் கே.காமராஜால் கொண்டு வரப்பட்டது.வறுமை காரணமாக குழந்தைகள் பள்ளி செல்லாமல் இருப்பதை தடுப்பதற்காக இத்திட்டத்தை அவர் கொண்டு வந்தார். இத்திட்டம் இப்போது மிகச்சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.
May 29
World
நிதாகத் சட்டத்தால் இந்தியர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து சவூதி அரசிடம் மத்திய அரசு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்டத்தால் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்க நேரிடும் என சவூதி அரசிடம் குர்ஷித் புகார் கூறி உள்ளார்.
May 29
World
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளை வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
May 29
World
இந்தியக் கடற்படை ரகசியங்கள் கசிந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரவிசங்கரனை இந்தியாவுக்கு நாடுகடத்துமாறு பிரிட்டன் உத்தரவிட்டுள்ளது.
May 29
World
ஆசியாவின் வளர்ச்சிக்கு அச்சாரமிட்ட நாடு ஜப்பான் என்று பிரதமர் மன்மோகன் சிங் புகழாரம் சூட்டினார். இந்தியாவும் ஜப்பானும் இயற்கையான கூட்டாளிகள் என்றும், ஜப்பானுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
May 29
World
ஜப்பானைச் சேர்ந்த நொபுரூ கராஷிமா எனும் தமிழறிஞருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
80 வயதாகும் நொபுரூ கராஷிமா, தென்னிந்திய வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வருகிறார். சென்னை பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ் ஆய்வுகள் மேற்கொண்டவர். சரளமாக தமிழ் மொழியில் பேசக் கூடியவர்.இவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை பத்மஸ்ரீ விருது வழங்கி கெüரவித்தார்.இவ்வாண்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், உடல் நிலை காரணமாக, புது தில்லியில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை.
May 29
World
சிலி நாட்டில் அனைவருக்கும் சமமான கல்வி கேட்டு மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. சாண்டியாகோவில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணியாக சென்றனர்.
அரசுக்கு எதிராகவும் மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி பெறப்படவில்லை என்று கூறி மாணவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
May 29
India
ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் கடல் அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மீனவர் திருவிழா நடைபெற்றது.
"கங்கம்மா ஜத்தாரா" எனப்படும் இந்த திருவிழாவில், இயற்கை சீற்றங்களில் இருந்து மீனவர்களை காத்து, நல்ல மீன் வளத்தை தர வேண்டி மீனவர்கள் வழிபாடு நடத்தினர்.
May 29
Tamil Nadu
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா
May 28
Tamil Nadu
'கற்கும் பாரதம்' என்னும் எழுத்தறிவுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்து தமிழ்நாடு சாதனை படைத்திருப்பதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை இணை மந்திரி சசிதரூர் பாராட்டுத்தெரிவித்துள்ளார்.
May 28
Tamil Nadu
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 30 லட்சம் மக்கள் பயன்பெறும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் புதன்கிழமை தொடங்கி வைக்கிறார். இதன்மூலம் இரு மாவட்ட மக்களின் நீண்டகால கனவு நனவாகிறது.
May 28
India
 கல்வி பெறும் உரிமை சட்டம் என்பது மத்திய அமைச்சர் கபில் சிபலின் முட்டாள் தனமான கொள்கை என கோவா முதல்வர் மனோகர் பரிகர் தெரிவித்துள்ளார். கல்வி பெறும் உரிமை சட்டம் குறித்து மாநில முதல்வர் ஒருவரே இவ்வாறு கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
May 27
Tamil Nadu
அண்ணா பல்கலை., துணைவேந்தராக ராஜாராம் பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், தரமற்ற கல்லூரிகளை கண்காணிக்க குழு அமைக்கப்படும். பி.இ., முடித்தவுடன் மாணவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
May 27
Tamil Nadu
 தென்னிந்தியாவிலேயே, முதன்மை விமானப்படைத் தளத்தை தஞ்சையில், மத்திய பாதுகாப்பு அமைச்சர், இன்று திறந்து வைக்கிறார்.
May 27
India
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
May 27
India
ராணுவ தலைமை தளபதி பிக்ராம் சிங் இந்தியா-பிரான்ஸ் இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்த நான்கு நாள் பயணமாக பிரான்ஸ் புறப்பட்டார்.
May 27
World
ஜப்பானில், அடுத்த ஆண்டு மே 14-25ம் தேதிகளில் பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நடக்கவுள்ளது.
May 27
India
துபாய்:ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் .இந்தியாவில் உள்கட்டமைப்புத் துறையில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்தி உள்ளார்.
துபாயில் அவர் அந்நாட்டின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் சந்தித்தார். அபுதாபி முதலீட்டு ஆணைய மேலாண் இயக்குநர் ஷேக் ஹமீதை சத்தித்து பேசம் போதுஇரு நாடுகளும் பரஸ்பரம் முதலீடுகளை மேம்படுத்துவது குறித்து விவாதித்தனர்..
May 27
India
 ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களம் இறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன் எடுத்து தோல்வியுற்றது. இப்போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில்‌ சென்னை அணியை, மும்பை அணி வென்று சாம்பியன் பட்டம் வென்றது.
May 26
World
ஜார்ஜியா தேசிய தினம்,
போலந்து அன்னையர் தினம்
May 26
Sports
 ஜெர்மன் ஓபன் டென்னிஸ் தொடரில் அர்ஜென்டினாவின் ஜூயன் மொனாகோ கோப்பை வென்றார்.
May 26
Tamil Nadu
தெரு நாய்களுக்கான சரணாலயம் கண்ணம்மாபேட்டையில் அமைக்கப்பட உள்ள இடத்தை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி சனிக்கிழமை ஆய்வு செய்தார்.சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை மநாகராட்சிப் பகுதிகளில் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் தெரு நாய்களுக்கும், வயதான நோய்த்தொற்றுள்ள தெரு நாய்களுக்கு சரணாலயம் அமைக்கப்படும் என்று மாநகராட்சியின் 2013 - 2014-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
May 26
Tamil Nadu
கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் உலக அளவில் 1:1 என்ற அளவில் உள்ளதாக இந்திய இரைப்பை குடல் இயல் சங்கத்தின் தமிழ்நாடு கிளை தெரிவித்துள்ளது.சர்வதேச ஜீரண ஆரோக்கிய தினம் ஆண்டுதோறும் மே 29-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
May 26
India
அமெரிக்காவின் சான் டியாகோவில் சர்வதேச விண்வெளி மேம்பாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு, தேசிய விண்வெளி சமூகத்தின் சார்பில் வெர்ன்ஹர் வோன் ப்ரவுன் நினைவு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
May 25
Sports
தமிழ்நாடு பாய்மரப்படகு சங்கம் சார்பில் தேசிய பாய்மரப்படகு சாம்பியன்ஷிப்போட்டி சென்னை துறைமுகத்துக்கு வெளியே கடற்பகுதியில் வருகிற 28–ந் தேதி முதல் 30–ந் தேதி வரை நடக்கிறது.
May 25
Sports
கரூரில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் டெல்லி இந்தியன் ஆர்மி மற்றும் சென்னை இந்தியன் ஓவர்சீஸ் அணிகள் வெற்றி பெற்றன.
May 25
Tamil Nadu
தமிழ் திரையுலகின் பிபரல பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் காலமானார். அவருக்கு வயது 91.
May 25
World
சவுதி அரேபியா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்,அந்நாட்டு இளவரசருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
May 25
India
மத்திய இணை அமைச்சர் வீரப்ப மொய்லிக்கு, சர்வதேச குடிமகன் விருதினை வழங்கி பாங்காக் பல்கலைக்கழகம் கௌரவித்துள்ளது.பெங்களூருவை, சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மையமாக மாற்றியதில், அப்போதைய கர்நாடக முதல்வராக இருந்த வீரப்ப மொய்லியின் பங்கு மகத்தானது என்பதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
May 25
World
அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நீதிமன்றமாகிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்தியர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
May 25
Tamil Nadu
சென்னை ராயபுரம் எம்.வி.சர்க்கரை நோய் மருத்துவமனையில் சர்க்கரை நோய் காயங்களை குணப்படுத்துவதற்கான "ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரஃபி' என்ற நவீன சிகிச்சைப் பிரிவு வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.தொடக்க விழாவில், தமிழக செய்தித்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பங்கேற்று புதிய சிகிச்சைப் பிரிவை தொடங்கி வைத்தார்.
May 25
World
குய்ட்டோ:ஈக்வடாரில் ரபேல் கோரியா நேற்று 2வது முறை அதிபராக பதவியேற்றார். 50வயது ஆகும் கோரியா இடதுசாரியின் தலைவராக இருந்தார்.‌
May 25
World
லண்டன்:இங்கிலாந்து நாட்டின் லீசெஸ்டரில், சீக்கியர்களின் வசதிக்காக இலவச பள்ளிக்கு அனுமதி கிடைத்துள்ளது.இது குறித்து 9 குர்த்வாரா தலைவர்கள் ‌தொடர்ந்து வலியுறுத்தியதை தொ‌டர்ந்து தற்போது அனுமதி கிடைத்துள்ளது. இப் பள்ளி 2014 செப்டம்பரில் துவக்கப்படும் என தெரியவந்துள்ளது.
May 25
Tamil Nadu
குன்னூர், சிம்ஸ் பூங்கா பழக்காட்சியில், பழங்களை கொண்டு "மெகா' பட்டாம் பூச்சி அமைக்கப்படுகிறது.குன்னூர் சிம்ஸ் பூங்காவில், 55வது பழக்காட்சி இன்று துவங்குகிறது. நாளை நிறைவடைகிறது.
May 25
INDIA
சுற்றுலாத்துறையில் தனியார் முதலீடு செய்ய வேண்டும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்
May 25
INDIA
பெங்களூர்:கர்நாடக சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.ஆர். பாட்டீல் புதிய அமைச்சராக இன்று (மே 25) பதவியேற்க உள்ளார்.
May 24
INDIA
பி.சி.சி.ஐ.,யின் நற்பெயரை சீனிவாசன் கெடுத்து விட்டதாக, ராஷ்டிரிய ஜனதா தளத்தலைவர் லாலு பிரசாத் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்
May 24
INDIA
ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் சென்னை அணியின் உரிமையாளர் குருநாத் மெய்யப்பன் இன்று மும்பை குற்றப்பிரிவு போலீசில் விசாரணைக்கு ஆஜரானார்
May 24
INDIA
இந்தியன் பிரிமியர் லீக் சூதாட்ட புகார்கள் தொடர்பாக, மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபலை, ராஜிவ் சுக்லா மற்றும் அருண் ஜெட்லி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்
May 24
WORLD
 லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் திடீர் தீ பரவியதையடுத்து, விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
May 24
TAMIL NADU
திருச்சி: பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த புதிய வகை பாஸ்போர்ட்டை, திருச்சியில் ஐ.ஜி., ராமசுப்ரமணியன் இன்று வெளியிட்டார்.
May 24
INDIA
போபால்: ம.பி., மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு கவுரவ மேயர் பதவி வழங்கப்படவுள்ளது. ம.பி., மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி சுனந்தா. இவர் சமீபத்தில் நடந்த பிளஸ் 2 தேர்வில் 91.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார். சுனந்தாவின் சாதனையை பாராட்டும் விதமாக அவருக்கு ஒரு நாள் மேயர் பதவி அளிக்க, மேயர் ஷோபா முடிவு செய்துள்ளார். இதன்படி, வரும் 28ம் தேதி சுனந்தா மேயர் பொறுப்பேற்கவுள்ளார்.
May 24
INDIA
பி.சி.சி.ஐ., தலைவர் பதவியிலிருந்து என்.சீனிவாசன் உடனடியாக பதவி விலக வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான சரத்பவார் கூறியுள்ளார்.

இந்த பகுதி பயனுள்ளவை என  நீங்கள் கருதினால் ஒரு விளம்பரத்தை கிளிக் செய்யவும். நீங்கள் கிளிக் செய்தமைக்கு நன்றி!

You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.

If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment

THANK YOU FOR COMMENT ON HTTP://TWEEKNTRICK.blogspot.com