விஜய் நடிக்கும் தலைவா படத்தின் இயக்குநர் விஜய் மற்றும் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் நேற்று (செவ்வாய்க்கிழமை) சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். நடிகர் விஜய்யின் அடுத்த படம் 'தலைவா' பாடல்கள் இணையதளங்களில் கசிந்துள்ளது தொடர்பாகவே இவர்கள் புகார் கொடுத்தனர்.
இப்படத்தின் பாடல் வெளியீடு விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்னரே 'யாரோ' பாடல்களை இணையதளங்களில் ரிலீஸ் செய்து விட்டனர்.
இயக்குநர் விஜய் மற்றும் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் புகார் கொடுத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நடிகர் விஜய் நடிக்கும் தலைவா படம் 60 கோடி ரூபாய் செலவில், தயாரிக்கப்பட்டு வெளியிடுவதற்கு தயாராக உள்ளது. இந்தப்படத்தை 120 நாள் வேலை செய்து அனைவரும் மிகவும் கடினமான உழைத்து தயாரித்துள்ளோம்.
இப்படத்தின் பாடல் வெளியீடு விஜய் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி வெளியிடுவதாக திட்டமிட்டிருந்தோம். ஆனால், திடீரென இணையதளங்களில் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை யார் வெளியிட்டார்கள் என்பதை கண்டுபிடித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எங்களுக்கு யார் மீது சந்தேகம் உள்ளதோ அவர்களைப் பற்றிய விபரங்களையும் கமிஷனரிடம் தெரிவித்துள்ளோம்" என்றனர்.
சரி.. இவர்களுக்கு யார் மீது சந்தேகம் உள்ளது? போலீஸ் யார் மீதாவது நடவடிக்கை எடுக்கிறார்களா பார்க்கலாம்!
No comments:
Post a Comment
THANK YOU FOR COMMENT ON HTTP://TWEEKNTRICK.blogspot.com